கிளிநொச்சியில் மீண்டும் பலத்த மழை: இரணைமடு வான்கதவுகள் திறப்பு

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

வடக்கின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நிலைமை ஓரளவு சீரடைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கிளிநொச்சியில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வீடுகளுக்கு திரும்பிய ஒரு சில குடும்பங்களும் கூட மீண்டும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, இரணைமடு குளத்தின் வான்கதவுகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers