சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் காரணமாக அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிசிடீவி கமரா ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் அந்த அறிக்கை சபாநாயாகரிடம் வழங்கப்படவுள்ளது.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகரவிடம் வினவிய போது, நாட்டு சட்டத்திற்கமைய அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய எந்தவொரு நபரும் கைது செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தராதரம் பாராமல் கைது செய்வதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.