விசேட அதிரடிப் படையினரிடம் சிக்கினார் மகிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

ஜா-எல , மாஹெலிய பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு சென்று துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக கட்டான பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தினேஷ் டி சில்வாவை விசேட அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ஜா-எல உதம்மட்ட பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து அதிரடிப்படையினர் அவரை கைதுசெய்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினருடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஜா-எல பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers