இலங்கையில் ஆபத்தான நிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் அதிமுக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுவோர் தொடர்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபு பாதுகாப்பிற்காக தகுதியற்ற பாதுகாவலர்கள் 100க்கு 70 வீதம் பிரபுக்களினாலேயே சேவையில் ஈடுபடுத்தி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாவலர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை உடற்பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் அந்த நடவடிக்கை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இதுவரையில் பிரபு பாதுகாப்பிற்காக செயற்படும் பிரிவில், ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களையே பிரபுக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தி வருகின்றனர்.

எனவே பிரபு பாதுகாப்பிற்காக 48 வயதிற்கு குறைந்த நபர்களின் பரிந்துரை செய்யும் புதிய வேலைத்திட்டம் ஒன்று பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சில அமைச்சர்கள், உறுப்பினர்களின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. பழைய பாதுகாப்பு அதிகாரிகளையே வைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers