20 வருடங்களுக்கு மேலாக கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிக்கு சென்ற தவிசாளர்

Report Print Yathu in பாதுகாப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 20 வருடங்களுக்கு மேலாக கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் காணப்படுகின்ற பகுதிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் நேற்று சென்றுள்ளார்.

இந்திராபுரம் பகுதிக்கு சென்ற தவிசாளர் சுப்பிரமணியம், கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன், தவிசாளர் தலைமையிலான குழுவினர் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடி உள்ளதுடன் விரைவாக குறித்த பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்தும் விளக்கியுள்ளனர்.

இதன்போது மிக விரைவில் குறித்த பகுதியின் ஒரு தொகுதி விடுவிக்கபடும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers