தென்னிலங்கையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தென்னிலங்கையில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியில் வாகன விபத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்தமையினால் நேற்று இரவு பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

காலி - உடுகம பிரதான வீதியின் தல்கம்பொல சந்தியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மோட்டார் வாகனத்தில் சென்ற ஒருவரினால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்பட்ட தினத்தன்று வாகனத்தை செலுத்தியவர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் விபத்தை ஏற்படுத்திய வாகன இலக்க தகடு உட்பட பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய போதிலும் பொலிஸார் அதனை கண்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து பொது மக்கள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்க சென்ற பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று இரவு 10.30 மணியளவில் காலியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers