நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

Report Print Malar in பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

போதுமான பொலிஸ் உத்தியோகஸ்தர் இன்மையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக தற்போது 1500ற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.