ஜப்பான் கடற்படையின் மிகப் பெரும் போர்க்கப்பல் ஹம்பாந்தோட்டையில்!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நல்லெண்ணப் பயணமாக ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இகாசுசி என்ற ஜப்பான் நாட்டுபோர்க்கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரபின்படி வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை வந்துள்ள ஜப்பானியப் போர்க்கப்பல் மூன்று நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்றும், இதன்போது இரு நாடுகளின் கடற்படையினரும் கூட்டாக பல நிகழ்வுகளில் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.