கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு - தமிழ் இளைஞன் மீது 21 முறை துப்பாக்கி சூடு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர்.

போதைப்பொருள் வர்த்தக குழுக்கள் இரண்டிற்கு இடையில் நீண்ட காலம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு அமைய இந்த துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழவர்களின் சட்ட வைத்திய அறிக்கை வெளியாகியுள்ளது.

அதற்கமைய உயிரிழந்த 35 வயதான ராஜேந்திரன் எனப்படும் சால்ஸ் என்பவரின் மீது 21 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடலில் 21 துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த காயங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது வாகனத்தில் பயணித்த 33 வயதான மதி என்ற இளைஞனின் உடலில் 4 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.