புத்தளத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு! புதிய ஆயுதகுழு உருவாக்கமா?

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

அண்மையில் புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்களின் பின்னணியில் புதிய ஆயுத குழுவின் உருவாக்கம் உள்ளதாக என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வண்ணாத்திவில்லு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் புதிதாக உருவாகிவரும் தீவிரவாத குழு ஒன்றின் ஆயுதங்களா? என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

80 ஏக்கர் தென்னந்தோட்டம் ஒன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் சந்தேகிக்கப்படும் 7 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தேடுதலின் போது 100 கிலோகிராம் சி4 வெடிப்பொருட்கள், 75 கிலோகிராம் அலுமினியம், 20 லீற்றர் நைற்றிக் அசிட் போன்றவை கண்டுப்பிடிக்கப்பட்டன.

இந்தப் பொருட்கள் ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers