முல்லைத்தீவிற்கு விரையும் ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு கொடுக்கவுள்ள மகிழ்ச்சி

Report Print Yathu in பாதுகாப்பு

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளுள் சுமார் 1,200 ஏக்கர் காணி நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளது.

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு பாதுகாப்பு துறைக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கமைய வடக்கில் தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் காணிகளை விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி படைத்தரப்பினருக்குப் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகள் நாளைய தினம் விடுவிக்கப்படுகின்றன.