ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் மூவர் கைது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேரை நுகேகொடை மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பன்னிப்பிட்டி கலல்கொட பிரதேசத்தில் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலக தலைவரின் போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்த நபர்கள் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென் பகுதியை சேர்ந்த மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவர் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகி வாழ்ந்து வருவதுடன் அங்கிருந்தவாறு போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைகளை வழிநடத்தி வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.