நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை: 3,807 பேர் கைது

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

நாடு முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது வெவ்வேறு காரணங்களுக்காக 3,807 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபாவனையில் வாகனம் செலுத்தியோர் 1,066 பேரும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் 851 பேரும், வெவ்வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 823 பேரும் மற்றும் ஹெரோய்ன் மற்றும் போதைப் பொருள் தம்வசம் வைத்திருந்தவர்களென 967 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரமின்றியும், பிரபல இடங்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 99 பேரும், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய வாகனங்கள் மீதான வழக்குகள் 5,215 பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.