விஹாரைகள் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தத் திட்டம்! இரகசிய பொலிஸார் தகவல்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பௌத்த விஹாரைகள் மீது குண்டுத் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்ட கும்பல் ஒன்று தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

50 பேரைக் கொண்ட கடும் போக்காளர்கள் இவ்வாறு பௌத்த விஹாரைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி இனவாதத்தை தூண்ட முயற்சித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் அண்மையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

இந்த கடும்போக்கு அமைப்பினைச் சேர்ந்த ஏழு பேரை ஏற்கனவே குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பௌத்த விஹாரைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆட்களை இணைக்கும் நோக்கில் இந்தக் குழுவினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புக்களை நடத்தியுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவருக்கு கிடைக்கப் பெற்ற குறுந்தகவல் ஒன்றின் அடிப்படையில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பௌத்த விஹாரைகளின் சிலைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களுடனும் இந்த தரப்பினருக்கு தொடர்பு உண்டு என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.