முல்லைத்தீவில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Report Print Theesan in பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், அதிரடிப் படையினர் இணைந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள முள்ளியவளை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து வான்வழி பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.