மைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி

Report Print Theesan in பாதுகாப்பு

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணி பயணித்த வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனம் விபத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் விபத்திற்கு இலக்கான இராணுவ வாகனத்தின் பாகங்கள் குறித்த பகுதியில் சிதறி காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

தற்போது அந்த இடத்தில் புகைப்படங்களை எடுப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.