வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் பயணிகளை திணறடித்த திடீர் சம்பவம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள் திடீரென பிரிந்து சென்றுள்ளது.

தலாவ மற்றும் ஷாவஸ்திபுர பகுதிக்கு இடையில் இந்த ரயில் பெட்டி பிரிந்துள்ளது.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் வவுனியாவில் பயணத்தை ஆரம்பித்த ரயில் ஒன்றே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ச்சியடைந்த போதும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு பெட்டிகளை பொருத்திய பின்னர் கொழும்பு நோக்கி மீண்டும் ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Latest Offers