கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் காத்திருக்கும் ஆபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இரவு நேரங்கில் வீடுகளின் ஜன்னல்களை திறந்து வைப்போர், திருடர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பிரதான நகரங்களில் வீடுகளின் யன்னல்கள் இரவு நேரங்களில் திறக்கப்பட்ட நிலையில் பணம் மற்றும் பெறுமதியான நகைகள் திருப்படுகின்ன.

இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடும் வெப்பமான காலநிலை நிலவும் போது அதிகமானோர் வீடுகளின் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூக்குகின்றனர். இதனை சாதகமான பயன்படுத்தி திருடர்கள் கைவரிசையை காட்டுகின்றனர்.

தனியாக வீடுகளில் இருப்போர், மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் தனது துணைக்கு யாரையாவது வைத்துக்கொள்வது சிறந்ததெனவும், பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.