கொழும்பில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஆபத்து! ஆளுநரின் அதிரடி நடவடிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு மாவட்டம் உட்பட மேல் மாகாணத்தில் அனுமதியற்ற கட்டடங்களை நீக்க நடடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

உரிய இடங்களில் அறிவித்தல்கள் போஸ்டர்கள் ஒட்டும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை பிரதிநிதிகளை அழைத்து இது தொடர்பில் ஆலோசனை வழங்கியதாகவும், அதற்கான சுற்று அறிக்கை வெளியிட்டதாகவும் மேல் மாகாண ஆளுநர் அசாத் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் தரமின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் மழையின் போது வீதிகள் நீரில் மூழ்குவதற்கு பிரதான காரணம் அனுமதியற்ற நிர்மாணிப்புகள் என மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில அனுமதியற்ற வகையில் கட்டப்பட்டவை என குற்றம் சாட்டப்பட்டுள்ளன.