கொல்லப்பட்ட இலங்கைப் படையினரின் சடலங்கள் எடுத்து வரப்படுகின்றன

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை காலை கொல்லப்பட்ட இரண்டு இலங்கைப் படையினரின் சடலங்களும் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இரண்டு படைவீரர்களும் பொலன்னறுவை மற்றும் பொல்பித்திகம ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.