இறுதி போரின் போது வான்படை மற்றும் கடற்படை தளபதிகளாக கடமையாற்றியோருக்கு பீல்ட் மார்ஸல் பட்டம்?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி போரின் போது இலங்கை வான் படையை தலைமை தாங்கிய எயார் மார்ஷல் ரொசான் குணதிலக்க மற்றும் கடற்படைக்கு தலைமைக்கு தாங்கிய அட்மிரால் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு பீல்ட் மார்ஸல் பட்டங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது குறித்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

பீல்ட் மார்ஸல் பதவியொன்றை வழங்குவதற்கான அதிகாரம் நாட்டின் படை சேனாதிபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்ட போரின் போது இராணுவப் படைக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு போரில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பீல்ட் மார்ஸல் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட போரில் ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு உயர் பதவியொன்று வழங்கப்படவிருந்த போதிலும் அதனை அவர் நிராகரித்திருந்தார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.