மஹிந்தவின் திருமண வீட்டிற்கு வருகை தந்த மர்ம ஹெலிகொப்டர்! அதில் வந்தது யார்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வு தொடர்பில் இன்னமும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணத்தன்று ஹெலிகொப்டரில் பிரபல விருந்தினர் ஒருவர் வருகை தந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் ஹெலிகொப்டரில் வருகை தந்தவர்கள் யார் என்பது தொடர்பில் இன்றும் மர்மம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணம் நடைபெற்ற தினத்தன்று ஹெலிகொப்டர் ஒன்றின் சத்தம் கேட்டதனை அங்கிருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் ஹெலிகொப்டர் ஒன்று திடீரென மெதமுலன தென்னந்தோட்டத்திற்கு அருகில் கீழ் நோக்கி பயணித்துள்ளது. இதனை அவதானித்த பலர் ஹெலிகொப்டர் நிறுத்துவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லை என குறிப்பிட்டனர்.

ஆனாலும் திருமண வைபவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் ஹெலிகொப்டர் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகைத்தந்தாரா? அல்லது வேறு யாரும் வருகை தந்தார்களா? என்பது இன்னமும் மர்மமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.