தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி! பெப்ரவரி முதலாம் திகதி...

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்தார் என பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக பிரிகேடியர் பிரியங்கவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு குறித்த விசாரணைகளை ஜனாதிபதி சட்டத்தரணி ஜயதிஸ்ஸ கொஸ்தா மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...