அனுமதிப்பத்திரமின்றி டைனமைட் வெடிமருந்துகளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டைனமைட் வெடிமருந்துகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

மூதூர், நெய்தல் நகர், பஹ்ரியா நகர் பகுதியை சேர்ந்த 27, 42 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு அடி நீளமான டைனமைட் குச்சியை கடலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களை சோதனையிட்ட போதே அவர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.