யாழ். சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை

Report Print Sumi in பாதுகாப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சுதந்திர தினமான இன்று யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறு குற்றம் புரிந்து, தண்டப்பணம் அறவிட முடியாமல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers