வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கிய முக்கிய புள்ளிகள்! கடும் அச்சத்தில் இலங்கை அரசியல்வாதிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
1951Shares

இலங்கையில் தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் உட்பட பலர் நேற்று டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த அதிரடி கைதினைத் தொடர்ந்து இலங்கை அரசியல்வாதிகள் பலர் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாகதுரே மதுஷ் என்ற போதைப்பொருள் வர்த்தகர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து இலங்கை அரசியல்வாதிகள் பலர் பதற்றமடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான டெனி ஹித்தெட்டிய கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மாகதுரே மதுஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டதன் பின்னரே அவர் இலங்கையில் பிரபல்யமடைந்துள்ளார்.

அத்துடன் பல கொலைகள் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகதுரே மதுஷ் வெளிநாடுகளில் இருந்து பாரிய தொகை ஹெரோயின் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.

இலங்கையின் பல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இவர் செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இவரின் கைதின் பின்னணியில் பல அரசியல்வாதிகளின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு எந்தவொரு அரசியல்வாதியும் சிக்குவாராயின் அவர்களின் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

சமகாலத்தில் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.