வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கிய இலங்கையர்கள்! அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகதுரே மதுஷ் உட்பட குழுவினர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்றபடும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மாகதுரே மதுஷ் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட் சட்டமுறைப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டே மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

எனினும் டுபாய் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.

மதுஷ் இருந்த அறையில் இருந்து கொக்கேன் எனப்படும் போதைப்பொருள் சிறியளவு மீட்கப்பட்டுள்ளன.

டுபாய் பொலிஸின் சர்வதேச கிளையின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பட்டியலில் மாகதுரே மதுஷ் உட்பட வர்த்தகர்களின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மாகதுரே மதுஷ் உட்பட குழுவினருக்கு டுபாயில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் மாகதுரே மதுஷிற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.