வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை ராஜதந்திரி யார்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகதுரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்

இவர்களில் ஒருவர் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தமை இலங்கை அரசியல் மட்டத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை வெளியாகாத நிலையில், அதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருக்கும் நபர் தொடர்பான தகவல்களை அரசாங்கம் தகவல் வெளியிடவில்லை. ஆனாலும் கடவுச்சீட்டினை யார் வைத்திருக்கலாம் என ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான தரப்பினரான ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நீதியரசர், அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகிறது.

வெளிநாடு செல்லும் அமைச்சரவை தீர்மானிக்கும் அதிகாரி, மாகாண ஆளுநர், பிரதான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், ஆணைக்குழு சபை உறுப்பினர்களுக்கு ராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.