நாடாளுமன்ற லிப்டில் சிக்கி உயிருக்கு போராடினாரா ரணில்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
340Shares

நாடாளுமன்றத்திலுள்ள மின்சார லிப்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிக்கித் தவித்ததாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மின்சார லிப்டில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக் கொள்வதற்கு முன்னரே பிரதமரும் சிக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஒரே நேரத்தில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த லிப்டில் சிக்கியமை தான் விசேட விடயமாக கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 12 உறுப்பினர்களுக்கு முன்னர் தனியாக அதில் சிக்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த லிப்டில் இடையில் நின்றமை தொடர்பான அனைத்து காணொளிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் இதுவொரு சூழ்ச்சி நடவடிக்கையோ அல்லது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதோ அல்ல என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற லிப்டில் சிக்கிய சில உறுப்பினர்கள், தாம் உயிருக்கு போராடியதாக சபாநாயகரிடம் முறையிட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதே லிப்டில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிப்ட் இடைநடுவில் பழுதடைந்தமையினால் சுமார் 15 நிமிடங்களாக 12 உறுப்பினர்களும் லிப்டில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.