டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தப்பிச் செல்ல வாய்ப்பு! இராணுவத் தளபதி

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் உள்ளிட்டவர்கள் அந்நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதே சிறந்து என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்நாட்டு சிறையில் அவர்களை தடுத்து வைப்பதே புத்தி சாதூரியமான தீர்மானமாக அமையும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களை கைது செய்தமைக்கான புகழாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தப்பிச் செல்லக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதாள உலகக்குழுக்களை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் அதன் பொறுப்பதிகாரி லத்தீப்பிற்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு என்பன மிகவும் முக்கியமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்துடன் இணைந்து புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொண்டு சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள முடியும் என தாம் விசேட அதிரடிப்படையினரை ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.