பாகிஸ்தான் வான் எல்லையில் பதற்றம்! ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

பாகிஸ்தான் தங்கள் விமான எல்லையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பல விமான சேவைகள் பாகிஸ்தானுக்கான தங்கள் விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, எமிரேட்ஸ், கட்டார் விமான சேவை, எத்திஹாட் பிளே டுபாய், கல்ப் எயார், எயார் கனடா ஆகிய விமான சேவைகள் தங்கள் விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்த விமான எல்லை மூடப்பட்டமையினால் இதற்கு மேலதிகமாக பிரிட்டிஷ் எயார்வேஸ், சிங்கப்பூர் விமான சேவை, பின் எயார் மற்றும் எயார் இந்தியா விமான சேவைகள், ஐரோப்பா பயண எல்லைக்காக வேறு வழியை பயன்படுத்தியதாக நேற்று அறிவித்துள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் நோக்கி விமான பயணங்கள் மேற்கொள்ளும் சர்வதேச விமான சேவைகளுக்கு, பாகிஸ்தான் விமான எல்லையை தவிர்த்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலதிகமாக எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் மற்றும் பெங்கொக் விமான நிலையங்களில் தரையிறங்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலதிக செலவுகளை ஏற்க நேரிட்டமையினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள நிலைமைகள் தொடர்பில் தீவிர அவதானத்தில் இருப்பதாக விமான சேவைகள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி எதிர்பார்த்த பாரிய அளவிலான விமான பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.