இலங்கையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காலி ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

காலி தடல்லவில் நிர்மாணிக்கப்படும் கட்டடம் ஒன்றில் பணி செய்த 14 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.