கொழும்பில் பாகிஸ்தான் பிரஜைகள் கைது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

பாதாள உலக குழு உறுப்பினரான தெமட்டகொடை சமிந்தவின் சகோதரரின் வீட்டில் இருந்த பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட 9 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தெமட்டகொடை பிரதேசத்தில் கட்டிடம் ஒன்றில் நடத்திய தேடுதலில் சமிந்தவின் சகோதரர் தெமட்டகொடை ருவான், பாகிஸ்தானை சேர்நத கணவன் ,மனைவி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதாக அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச் செயல்களை அடக்கும் பிரிவினர் மேற்கொண்ட இந்த தேடுதலில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வாயு ரைபிள், இரண்டு வாள்கள், பணம் எண்ணும் இயந்திரங்கள், 4 கிராம் கொக்கேய்ன், ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம், இரண்டு நவீன ரக கார்கள், ஜீப் வண்டி என்பவற்றை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் தெமட்டகொடை ருவானின் மகனும் அடங்குவதாக லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.