நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் கைகுண்டு மீட்பு

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியால வளாகத்தில் வெடிக்காத நிலையில் இருந்த கைகுண்டு ஒன்றை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதை பாடசாலை நிர்வாகம் அவதானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிசார் கைக்குண்டினை அவதானித்ததுள்ளதுடன் அவ் இடத்தை பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளனர். நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த கைகுண்டினை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறித்த பாடசாலையில் சுற்றுச் சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து குறித்த கைக்குண்டு வந்திருக்கலாம் என பாடசாலை நிர்வாகத்தினால் சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இது தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.