கைது செய்யப்பட்ட இந்திய வீரரை விடுவிக்க வலியுறுத்தி போராடிய பாகிஸ்தான் மக்கள்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in பாதுகாப்பு

பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரரை விடுதலை செய்யக்கோரி அந்நாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிழமை அதிகாலை இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர். எனினும் அத்தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பினர் தெரிவித்தாலும் அத்தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், மீண்டும் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்த விளைந்த போது, பாகிஸ்தான் படையினர் சுட்டுவீழ்த்தியதில் ஒரு இந்தியப் படை வீரர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தொடர்பில் வெளியான காணொலிகளால் இந்தியாவில் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் எழுந்தன.

கைது செய்யப்பட்ட விமானப் படை வீரரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், பேச்சு வார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் மேலும் இது பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தானிய மக்கள் போராட்டம். நடத்தியுள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி இராணுவ முகாமில் கைது செய்யப்பட்ட இந்திய வீரர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அபிநந்தனை விடுவிக்கக்கோரி இந்தியா இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அபிநந்தன் லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்படுகிறார். அபிநந்தன் லாகூரில் இருந்து விமானம் மூலம் நாளை இந்தியா வருகிறார். அபிநந்தன் டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைவார் என தகவல் வந்துள்ளன.