வயல் காவலில் ஈடுபட்டிருந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Abdulsalam Yaseem in பாதுகாப்பு

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதலியார் குளம் பகுதியில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் திருகோணமலை - இலிங்கநகர் பகுதியை சேர்ந்த கண்மனிசிறிஸ் கந்தராஜா (74 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் முதலியார் குளம் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டு வந்த போது யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.