கிளிநொச்சி, கண்ணகி நகர் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு

Report Print Yathu in பாதுகாப்பு

கிளிநொச்சி, கண்ணகி நகர் பகுதியில் இருந்து பாவனைக்கு உதவாத வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடி பொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கழிவு நீர் செல்லும் ஆற்று பகுதியில் வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது எல்.எம்.ஜி.ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார் எறிகனை ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் - சுமன்