விமானங்களை தாக்கக்கூடிய தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய தோட்டாக்களுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பறக்கும் விமானங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு பயன்படுத்தப்படும் 73, சீ.பி.சீ ரக வெளிநாட்டு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 346 துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இன்று மாலை ரித்திமல்லியத்த, தம்பகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து துப்பாக்கி தோட்டாக்களுடன் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் விடுமுறையில் வீட்டுக்கு வந்த ஓர் இராணுவப் படைவீரர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வீட்டின் அறையொன்றில் இந்த ஆயுதங்கள் காணப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.