இலங்கையில் பெண்களுக்காக மட்டும் ஆரம்பமாகியுள்ள புதிய சேவை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் பெண்களுக்கு மட்டும் தனியான பேருந்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ரயில் சேவைகளை போன்று பெண்களுக்கான பேருந்து சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட பேருந்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்காக இன்றைய தினம் தனியான ரயில் பெட்டியை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இன்று காலை முதல் 7 ரயில்களில் பெண்களுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.