தலவாக்கலையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in பாதுகாப்பு
58Shares

நுவரெலியா மாவட்டம் - தலவாக்கலை நகரத்தில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில் இன்று மக்களின் நலன் கருதியும், இப்பிரதேசத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்கள் ஆகியன சோதனையிடப்பட்டுள்ளன.

இதன்போது பல கடைகளில் காலாவதியான மற்றும் பாதுகாப்பான முறையில் பொதியிடப்படாத உணவுகள் அகற்றப்பட்டு மண்ணெண்ணெய் இட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன், பல கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.