காட்டு யானையின் தாக்குதலால் வீடொன்று சேதம்

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

கிண்ணியா, மகரூ கிராமத்தில் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக வீடொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் தான் யானையின் தாக்குதலில் இருந்து மயிரிலையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நஷ்ட ஈட்டு தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.