துப்பாக்கியுடன் லண்டன் சென்ற இலங்கையர் விமான நிலையத்தில் சிக்கினார்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பிரித்தானியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது பயண பொதியில் துப்பாக்கி ஒன்றை மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் நோக்கி சென்றவரே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த அமெரிக்க குடியுரிமையை கொண்டவர் ஆவார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.