அமெரிக்காவிலிருந்து வெள்ளவத்தைக்கு வந்தவர் ஆயுதத்துடன் கைது! நபர் தொடர்பில் கசிந்த விபரங்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

துப்பாக்கி ஒன்றை பையில் மறைத்து வைத்து அமெரிக்கா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

56 வயதான சந்தேகநபர் கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள தனது தாய், தந்தையை பார்க்க இலங்கை வந்துள்ளார்.

மீண்டும் அமெரிக்கா நோக்கி செல்லும் போது தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை கொண்டு செல்ல முயற்சித்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் லண்டன் ஊடாக அமெரிக்கா செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.