மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது! திட்டவட்டமாக மறுத்தது இராணுவம்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இராணுவம் உள்ளக விசாரணைகளை நடத்தாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வரும் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ளார்.

15 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.

அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர், அனைத்தலுக மனிதஉரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என்று, ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன” என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில்மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த இலங்கை இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டஇராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் உள்ளக விசாரணைகளை நடத்தாது.

அதற்குப் பதிலாக, இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.