தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான தலைவர் தேடல் ஆரம்பம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான நிரந்தர தலைவரை நியமிக்கும் நிகழ்ச்சி நிரலை அரசியலமைப்பு சபை பிற்போட்டுள்ளது.

இந்தநிலையில் தற்காலிக தலைவர் தொடர்ந்தும் கூட்டங்களுக்கு தலைமையேற்பார்.

ஏற்கனவே இந்த நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் தற்காலிக தலைவர் பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே தலைமையில் அண்மையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை கூடுவதென்று முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கனவே தலைவராக இருந்த பி.எச்.மானதுங்கவின் பதவிக்காலம் பெப்ரவரி 8ஆம் திகதியுடன் முடிவடைந்தமையை அடுத்தே தற்போது புதிய தலைவருக்கான தேடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் தமது பதவிக்காலம் 2020 வரைக்கும் இருப்பதாக மானதுங்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.