எட்டு மணிநேர விசாரணைக்குப் பின்னர் வெளியேறினார் வசந்த கரன்னகொட

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய எட்டு மணி நேரம் விசாரணைகளின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவே அட்மிரல் கரன்னகொடவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், அட்மிரல் கரன்னகொடவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும், இன்று அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றம் பணித்திருந்தது.

நீதிமன்றப் பணிப்புக்கு அமைய இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான வசந்த கரன்னகொடவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 8 மணிநேரம் விசாரணைகளை நடத்தினர்.

காலையில் இருந்து விசாரணைக்கு முகம் கொடுத்திருந்த அவர், மாலை 5 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

Latest Offers