சிறைக் கைதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஹெரொயின் போதைப்பொருளை கொண்டு சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய உடன் செயற்பட்ட பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை கைது செய்துள்ளதுடன் ஹெரொயின் போதைப் பொருளையும், ஒரு தொகை கேரளாக் கஞ்சாவையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடமை புரியும் இபலோகம பகுதியை சேர்ந்தவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.