கொழும்பில் சற்று முன்னர் குடும்பம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு - இருவர் பலி - ஒருவர் படுகாயம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல, பிலியந்தலை பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகனின் நண்பர் உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்த நிலையில் மொரட்டுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.