அதிசக்தி வாய்ந்த வெடி மருந்து தென் பகுதியில் சிக்கியது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

ஹம்பாந்தோட்டை பஹல அந்தரவெவ பிரதேசத்தில் 250 கிலோ கிராமுக்கும் அதிகமான அதிசக்தி வாய்ந்த வெடி மருந்து மற்றும் வெடி பொருட்களை அதிரடிப்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

வீதியில் சென்றுக்கொண்டிருந்த சிறிய சுமை ஊர்தியை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியும் சாரதி அதனை நிறுத்தாது சென்றுள்ளார். இதனையடுத்து வாகனத்தை விரட்டி சென்ற அதிரடிப்படையினர் வாகனத்தை மறித்து பிடித்துள்ளனர்.

சுமை ஊர்தியில், 25 கிலோ கிராம் அமோனியோம் நைட்ரேட் வெடி மருந்து அடங்கிய 9 மூட்டைகள், 196 ஜெலட் நைட் திரிகள், 100 மின்சார டெட்டநேட்டர்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட சுமை ஊர்தியை கைப்பற்றியுள்ள அதிரடிப்படையினர், சாரதியை கைது செய்துள்ளது. சூரியவெவ அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்த இந்த வெடி பொருளை கைப்பற்ற முடிந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.