மன்னம்பிட்டிய பாதுகாப்பு வனப்பகுதிக்குள் புதையல் எடுக்கச் சென்ற நான்கு பேரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் 19,21,மற்றும் 26 வயதுடைய கதுருவெல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.